Monday, March 5, 2018

சாதிய படுகொலைகளும் சகிக்க முடியாத அலட்சியமும்

சாதிய படுகொலைகளும் சகிக்க முடியாத அலட்சியமும்

கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் உலவிக்கொண்டிருப்பது வெள்ளம்புத்தூர் சம்பவமாகும். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள சிறு கிராமம் வெள்ளம்புத்தூர். இக்கிராமத்தில் ஏழை தலித் குடும்பத்தைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணான ஆராயி(45), மகள் தனம் (15), மகன் சமயன்(9) ஆகியோர் தலித் மக்கள் வசிக்கும் பகுதியின்கடைசியாக உள்ள தமது தொகுப்பு வீட்டில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சம்பவம்.கடந்த 21.2.2018 ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கப் போகிறோம் என்று சொல்லிட்டு தமது வீட்டின் உள் தாழ்ப்பாள் இல்லாத கதவை மூடிக்கொண்டு மூவரும் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் 22ஆம் தேதி காலை எப்பொழுதும் தண்ணீர் பிடிக்க தன்னை வந்து எழுப்பும் தனம்இன்னும் வரவில்லையே என தனத்தின்சினேகிதி, அவ்வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே இருந்த கொடூரமான காட்சியைப் பார்த்து அலறி கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துபார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இளந்தளிர் சமயன் கொடுங்காயங்களோடு பிணமாகக் கிடக்கிறான். தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாகக் கிடக்கின்றனர். உடனடியாக திருக்கோவிலூர் பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.அங்கேயோ அந்த நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எனக்கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய், மகள் இருவருக்கும் நினைவுதிரும்பவில்லை. இதில் மகளின் பிறப்புறுப்பில் 12 தையல் போடப்பட்டிருப்பதிலிருந்தே நடந்த கொடுமையை புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் வரையிலும் மாவட்டகாவல் கண்காணிப்பாளரோ அல்லது துணைக் கண்காணிப்பாளரோ சம்பவ இடத்திற்கே செல்லவில்லை என்பதிலிருந்தே மாவட்ட காவல்துறையின் அலட்சியத்தை அளந்திட முடியும்.இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். 24 ஆம் தேதி தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன்,மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் எம். ஆறுமுகம், எஸ். வேல்மாறன், வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் வெள்ளம்புத்தூர் கிராமத்திற்கு சென்று மேற்படி ஆராயியின் உறவினர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் வெள்ளம்புத்தூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பிரேத பரிசோதனைக்குப்பின் 25ஆம்தேதி சமயன் உடல் அடக்கம் வெள்ளம்புத்தூரில் நடந்தது. இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்வே. ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெயக்குமார் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புக்களின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ஆராயியின் மூத்த மகன்கள் மூவருக்கும் 25, 22, 19 வயதுதான். மற்றொரு மகள் அஞ்சலாட்சிக்கோ 17 வயதுதான். குடும்ப வறுமையால் இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார். மகன்கள் 3 பேருமே வறுமைக்கு கல்வியை தீனியாக்கிவிட்டு பெங்களூரில் கூலி வேலைசெய்து வருகின்றனர்.26ஆம் தேதி தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வெள்ளம்புத்தூரில் சம்பவ இடத்தைப் பார்வையிட வரும்பொழுது உடன் வந்து கடமையை கச்சிதமாக நிறைவேற்றிவிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.இந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற சம்பவம் இதே ஊரில் இதற்கு முன்பும்இரண்டுமுறை நடந்துள்ளன. காவல்துறை வழக்கம்போல் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடைபெறும் இந்த தாக்குதல்களால் பெண்களும், குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். காவல்துறை அலட்சியமாக இருப்பதாலும் நாட்கள் கடந்துகொண்டே இருப்பதாலும் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக ஊடகங்களில் பலரும் பலபல தகவல்களை பதிவு செய்துவருவது கவலையளிக்கிறது. ஆயினும் மாவட்ட காவல்துறையோ, மாவட்ட ஆட்சியரோ, மாநில முதல்வரோ இக்கொடிய சம்பவம் குறித்து தேவையான கவனம்செலுத்தவில்லை என்பது வேதனையானது.திருக்கோயிலூருக்கு அருகருகே இப்படி தொடர்ச்சியாக மர்மமான தாக்குதல்களும், கொலைகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது வேதனை அளிக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் செங்கனாங்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த விசித்ரா என்ற +1 படிக்கும் தலித் மாணவிநாக்கைக்கடித்த நிலையில், உடலில்காயங்களுடன் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை தற்கொலைஎன போலீசார் வழக்குப்பதிந்து உண்மையை மூடி மறைத்து விட்டனர்.கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதிஇரவு வசந்தகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தபொறியியல் படித்துவந்த மாணவன் கிருபாநிதி, +2 படித்து வந்த மாணவன் கோபி, 8ஆம் வகுப்பு படித்த வீரமணி ஆகிய 3 தலித் இளைஞர்களும் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு இருவர்இறந்துவிட்டனர். கோபி இன்னமும் சுயநினைவு திரும்பாமல் சிகிச்சை பெற்று வருகின்றார். இது டிராக்டரின் பின்னால் மாட்டப்பட்டிருந்த ரொட்டவெட்டர் இடித்து ஏற்பட்ட வாகன விபத்துஎன உண்மையை ஆழக்குழித் தோண்டிபுதைத்துவிட்டது காவல்துறை.இந்த சம்பவங்கள் அனைத்திலும் உரிய சாதாரண தடயங்களைக் கூடசேகரிக்காமல் செயல்பட்டுள்ள காவல்துறையின் நடவடிக்கைகள் இப்பகுதிமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம்புத்தூரில் இச்சம்பவம் நடந்து ஒருவாரம் கடந்த பிறகும் பாதிப்புக்குள்ளான ஆராயி குடும்பத்திற்கு நிவாரண உதவியோ, பாதுகாப்போ, ஆறுதலோக்கூட அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தெரிவிக்காதது வேதனையளிக்கிறது. மாவட்ட காவல்துறையின் அலட்சியமே இப்படி தொடர் கொலைகளும் குற்றங்களும் நடப்பதற்கு காரணம். இந்த மூன்று சம்பவங்களிலும் பாதிப்புக்குள்ளானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அருகிலுள்ள கேரளாவில் மனநிலைபாதிக்கப்பட்ட மது கொலைசெய்யப்பட்டதற்கு அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன்அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்ததுடன் 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் தமிழக முதல்வரின் நடவடிக்கை எப்படி உள்ளதுஎன நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் பாதுகாப்பிற்கு என 13 அம்சத் திட்டத்தை அறிவித்தார். இதில்நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை காவல்துறை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள்மீது குண்டர் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி சட்டத்திருத்தம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டம்தோறும் மகளிர் நீதி மன்றம், பாலியல்வன்கொடுமை வழக்குகளில் விரைவில்தீர்ப்பு, பெண்கள் இன்னல் தடுப்புச்சட்டம் குறித்து பெண் காவலர்களுக்கு பயிற்சி, பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவு, மறுவாழ்வுப் பணிகளை மாநில அரசே செய்யும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணிநேரதொலைபேசி வசதி, அரசுக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது, வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள்... என்பன போன்ற 13 அம்சத் திட்டங்கள் கிடப்பிலேயே உள்ளன. அம்மா வழி அரசு சும்மாவே உள்ளது.உடனடியாக தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தலித் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து அவசரமாக கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை உறுதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.கொலையான சிறுவன் சமயன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆராயி, தனம் இருவருக்கும் தேவையான உயர் சிகிச்சை அளித்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கான செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். திருக்கோயிலூர் பகுதிமுழுவதும் அச்சத்தில் உறைந்து போய் உள்ள பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவு-பகல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

ஜி.ஆனந்தன்சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

Tuesday, August 24, 2010

சாதி ஆதிக்கத் தடை தொடர் போராட்டத்தால் தகர்ந்தது!



விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர், கடந்த 9 மாதங்களாக தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைக்கான ஆதாரங்களில் ஒன்றாக அனைவராலும் பேசப்பட்ட கிராமம். அவ்வூர் ஆதிதிராவிட மக்கள் ஆலயத்திற்குள் நுழையத்தடை விதிக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இத்தடையை அகற்றிட தமிழக அரசையும், விழுப்புரம் மாவட்ட அரசு நிர்வாகத்தையும் வலியுறுத்தியது. பலனில்லை. 2009 செப்டம்பர் 30ம்நாள் ஆலயப்பிரவேசத்திற்கு ஆதிதிராவிட மக்களுடன் அனைத்து சமூகத்தினரை யும் அழைத்துச்சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரையும் ஊருக்கு முன்னாலேயே தடுத்து நிறுத்தி தடியடித்தாக்குதல் நடத்தி, 103 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தது. மாவட்ட காவல்துறை எஸ்.பி.அமல்ராஜூம், கோட்டாட்சியர் ராஜேந்திரனும், டிஎஸ்பி முத்து நல்லியப்பன் ஆகியோரால் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா அடிவயிறு சிதைக்கப்பட்டு, சுமார் 3 மாதத்திற்கு மேல் சிகிச்சையளிக்கப்பட்டு உயிர்மீண்டார் என்றால் இவர்களின் கொடூரத்தை புரிந்து கொள்ள முடியாதா?

தீண்டாமை சட்டப்படி குற்றம் என்பது உண்மையானால், சாதியைச் சொல்லி தலித்துகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்ற ஆதிக்கச் சாதியினரும், சட்டம்ஒழுங்கைச் சொல்லி ஆதிதிராவிடர்களை கோயிலுக்கு செல்ல விடாமல் மிருகவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சட்டப்படி குற்றவாளிகள்தானே?

தலித்துகளை கோயிலுக்குள் நுழையக்கூடாதெனத் தடுத்திட்ட ஆதிக்கச் சாதியினர் மீதும் நடவடிக்கை இல்லை. ஆதிதிராவிட மக்களையும் மற்ற அனைவரையும் கோயிலுக்குள் செல்லக்கூடா தென அடித்து, அதிகாரத்தை பயன்படுத்தி பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை இல்லை.

மாறாக தமிழக அரசு, எஸ்.பி.அமல் ராஜூக்கு டிஐஜி பதவி உயர்வு கொடுத்து ‘பாராட்டியது’. டிஎஸ்பி முத்துநல்லியப் பனை ஏடிஎஸ்பி ஆக பதவி உயர்வளித்து கவுரவித்தது.

சட்டவிரோதமாக தடியடி நடத்தி, சட்டமன்ற உறுப்பினர் லதாவையும் கொடூர மாகத் தாக்கிய காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வல்லவா கொடுத்துள்ளீர்கள்; என சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்ட கேள்விக்கு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீஸ் வாகனங்கள் உடைக்கப் பட்டதாகவும், சட்டம் அமைதியைப் பாதுகாக்கவே சிறு பலப்பிரயோகம் செய்ததாகவும், போலீஸ் கொடுத்த பொய்யறிக்கை யையே தமது பதிலுரையாக பகன்றாரே; இது உண்மையை மூடிமறைத்திடும் பதிலல்லவா? இமயமலையையே இட்லிக்குள் மறைத்திடும் புதிய யுக்தியல்லவா?

தம்மை தாக்கி, தமது சக தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய, பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்து தமது அதிகாரத்தை தவறாக தமது சொந்த உணர்ச்சிகளுக்கு சாதகமாய் பயன்படுத்திய எஸ்.பி அமல்ராஜ் மற்றுமுள்ளவர்கள் மீதும் சட் டப்படியான நடவடிக்கை எடுக்க வேண் டுமென சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா 18.3.2010ல் புகார் கொடுத்த பின்னணியில் இப்புகாரின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்து அறிக்கையளிக்க விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவு போடப்பட்டது.

இவ்வுத்தரவின்படி ஏப்ரல் 8, ஜூன் 4, 19 ஆகிய தேதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று இதுவரை 23 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

19.6.2010 காலையில் ஜி.லதா எம்எல் ஏவும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் ஜி.ஆனந்தனும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் தமது சாட்சியங்களை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அதன் பின்னர் மாலை 4.30 மணிக்கு காங்கியனூர் சென்றனர். காங்கியனூர் மேட்டுச் சேரியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் ‘நாங்கள் திரௌபதை அம்மன் ஆலயத் திற்கு உள்ளே சென்று வழிபட வேண்டுமென’ ஆர்வத்தை வெளியிட்டனர். அதன் பின்னர் காங்கியனூர் திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு ஜி.லதா எம்எல்ஏவும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் எஸ். ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.வேல்மாறன் உள்ளிட்டவர்கள் அந்த மக்களுடன் ஆலயத்திற்குள் சென் றனர்.

ஆதிக்கத்தின் பெயரால் இதுவரை இருந்திட்ட சாதி அழுக்குகள் அகற்றப்பட் டன. ஆதிதிராவிடர் மக்கள் சூடம் ஏற்றி சூறைத்தேங்காய் உடைத்து தமது உணர்வின் மகிழ்ச்சியை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொண்டனர்.

ஆலயத்திற்கு வெளியில் ஆதிதிரா விடர் மக்களும், காங்கியனூரின் பிற சமூக மக்களும் கூடிநின்ற இடத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜி.லதா எம்எல்ஏ, இன்றுபோல் என்றும் இவ்வூர் மக்களிடையே ஒற்றுமை தொடர வேண்டும். இவ்வூரின் அடிப்படையான மக்கள் தேவைக்கு ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். சாதி ஒடுக்குமுறையும், ஏற்றத்தாழ்வான வாழ்க்கையை நியாயப் படுத்தும் சமூக ஒடுக்குமுறையும் முற்றாக அகற்றப்பட அனைவரும் இணைந்து போராடுவோம் என்றார். அது அர்த்தமுள்ள அறைகூவல் அல்லவா?

இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை அமைத்து அதற்கான துவக்க விழாவையும் கலை நிகழ்ச்சியோடு நடத்தினார்கள். பெண் களும் ஊர்ப்பெரியவர்களும் அனைவருக் கும் உணவுகொடுத்து உபசரித்து மகிழ்ந் தார்கள்.

காவல்துறையினரும் தமது பங்கிற்கு சுமார் 100 பேருக்க மேல் திரண்டிருந்த னர். ஆயினும் என்ன? ஆலய வழிபாடு அமைதியாக நடந்தது. அன்றிருந்த எஸ்.பி. அமல்ராஜ் இன்று இல்லை. அன் றிருந்த டிஎஸ்பி முத்துநல்லியப்பன் இன்று இல்லை. அன்றிருந்த கோட்டாட் சியர் ராஜேந்திரன் இன்று இல்லை. இன்று செஞ்சி டிஎஸ்பி ராஜேந்திரனின் சாதுர்யத்தால் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தாலும் எந்தப் பதட்டமும் இல்லாமல் அமைதியாக அனைத்தும் நிறைவே றியதே!

செப்டம்பர் 30ல் நடந்த தடியடித் தாக்குதலுக்கு ஆதிக்க சாதிவெறிக்கு துணைநின்ற எஸ்.பி.அமல்ராஜூம், டிஎஸ்பி முத்துநல்லியப்பனும், கோட்டாட் சியர் ராஜேந்திரனும்தான் காரணம் என் பதை இப்பொழுதாகிலும் தமிழக அரசு உணருமா? வன்கொடுமை தடுப்பு, அதி கார துஷ்பிரயோகத் தடுப்புச் சட்டப் பிரி வுகளின்கீழ் இவர்கள் தண்டிக்கப்படு வார்களா?

ஆதிதிராவிட மக்களின் சுயமரியா தைக்காகப் போராடியவர்கள் மீது போடப் பட்ட பொய்வழக்குகள் வாபஸ் பெறப்படுமா?